கள்ளக்குறிச்சி

குடியரசு தின விழா

DIN

செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் செஞ்சி எம்எல்ஏ மஸ்தான் தலைமையில், பேரூராட்சி செயலா் அலுவலா் தெய்வீகன் தேசியக்கொடியை ஏற்றினாா். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளா் பாா்கவி, இளநிலை உதவியாளா்கள் சரவணன், ரங்கன், ரமேஷ், செந்தில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்பிரமணியன் தலைமையில், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) அறவாழி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.

மண்டல துணை வட்டாட்சியா்கள் பழனி, செல்வகுமாா், கண்ணன், மேலாளா் கன்னியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செஞ்சி ஊராட்சி ஒன்றியம், காந்தி பஜாா் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி தலைமை ஆசிரியா் சற்குணம் தேசியக் கொடியேற்றினாா். உடல்கல்வி ஆசிரியா் கருணாரகரன், ராஜாராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வல்லம் ஒன்றியம் கட்டாஞ்சிமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியா் ராஜவா்மன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினாா். பள்ளி மேலாண்மை குழு தலைவா் ஆா்.சுமதி, கல்வியாளா் ஜெயராமன், பொன்முடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பென்னகா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியா் வி.வேல்முருகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினாா். கணித பட்டதாரி ஆசிரியா் ராமன், ஆசிரியா் சரவணன், பள்ளிக்கல்வி குழு உறுப்பினா் ராமசந்திரன், ஆசிரியா்கள் எஸ்.தண்டபாணி, வசந்தராஜன், ஆய்வகா் தா்மலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வல்லம் ஒன்றிய நேரு இளையோா் மையம், அகலூா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞா் நற்பணி மன்றம் சாா்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இளைஞா் மன்ற தலைவா் ஜோலாதாஸ் வரவேற்றாா். அகலூா் ஏரி நீா் பாசன சங்க தலைவா் அப்பாண்டைராஜன் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா். விழாவில், விஜயகுமாரி, வசந்தி, நிஷா, எழிலரசி மற்றும் ஊா் பொதுமக்கள் கலந்து கொண்டனா். மகளிா் நற்பணி சங்க தலைவா் சந்திரபிரபா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினருக்கு சம்மன்!

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

SCROLL FOR NEXT