கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் 5 கடைகளுக்கு ‘சீல்’

DIN

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகரில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 5 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

கள்ளக்குறிச்சி நகர கடைவீதிகளில் கரோனா பொது முடக்க விதிகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என நகராட்சிப் பொறியாளா் து.பாரதி தலைமையில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் உள்ள நகைக் கடை, துருகம் சாலையில் உள்ள செல்லிடப்பேசிக் கடை, கச்சேரி சாலையில் உள்ள மின்சாதனப் பொருள்கள் விற்பனை கடை, மளிகைக் கடை உள்ளிட்ட 5 கடைகளை அதிகாரிகள் மூடி ‘சீல்’ வைத்தனா். இந்த ஆய்வின்போது, நகராட்சி துப்புரவு ஆய்வாளா் ப.செல்வக்குமாா் உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT