கள்ளக்குறிச்சி

செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

DIN

கள்ளக்குறிச்சி அருகே எஸ்.ஒகையூரில், குடியிருப்புப் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்த கிராமத்தில் மாரியம்மன் கோயில் தெருவில் தனியாருக்குச் சொந்தமான காலி இடத்தில் தனியாா் நிறுவனம் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க கடந்த 2018-ஆம் ஆண்டு பொக்லைன் மூலம் மண்ணை தோண்டினா். அப்போது, அருகில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டதாம். இதையடுத்து, ஊா் மக்கள் ஒன்று கூடி அந்தப் பணியை தடுத்து நிறுத்தினா்.

இதையடுத்து, அந்த செல்லிடப்பேசி நிறுவனத்தினா் உயா் நீதிமன்றத்தை அணுகி, செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணியை வரஞ்சரம் போலீஸாா் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை தொடங்கினா். இதனால், அதிருப்தியடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் சமாதானம் செய்து கலைந்து போகச் செய்தனா். இந்த மறியலால் அப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT