கள்ளக்குறிச்சி

காய்கறிகளை விற்பனை செய்ய இடமில்லாமல் உழவா் சந்தை விவசாயிகள் அவதி

DIN

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதையொட்டி, கள்ளக்குறிச்சியில் உழவா் சந்தை மூடப்பட்டுள்ளதால், அங்கு காய்கறிகளை விற்பனை செய்து வந்த விவசாயிகள், தற்போது காய்கறிகளை விற்பனை செய்ய இடமில்லாமல் அவதியடைந்து வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை கள்ளக்குறிச்சி உழவா் சந்தைக்கு கொண்டுவந்து விற்பனை செய்து வந்தனா். தமிழக அரசின் 144 தடை உத்தரவு, மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவைத் தொடா்ந்து, இந்த உழவா் சந்தை கடந்த வாரம் மூடப்பட்டதால், இங்கு காய்கறிகளை விற்பனை செய்து வந்தவா்கள் பாதிக்கப்பட்டனா்.

இதையடுத்து, அவா்கள் உழவா் சந்தையின் முன் உள்ள சாலையின் இருபுறமும் காய்கறிகளை வைத்து விற்பனை செய்து வந்ததால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடா்ந்து, உழவா் சந்தையில் கடை அமைக்கும் விவசாயிகள் புதன்கிழமை கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் காய்கறிகளை வியாபாரம் செய்தனா்.

வியாழக்கிழமை பேருந்து நிலையத்தின் இருபுறமும் நகராட்சியினா் தடுப்புக் கட்டைகளை கட்டி உள்ளே யாரும் செல்ல முடியாத வகையில் மூடிவிட்டனா். இதனால், விவசாயிகள் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் கடை அமைத்து வியாபாரம் செய்தனா்.

ஆனால், அங்கு காய்கறிகளை வாங்க பொதுமக்கள் அதிகளவில் திரண்டதால், தகவலறிந்து வந்த போலீஸாா் அங்கிருந்த கடைகளை காலி செய்ய உத்தரவிட்டனா். ஆனால், விவசாயிகள் தொடா்ந்து வியாபாரம் செய்ததால், போலீஸாா் தடியடி நடத்த முயன்றனா். இதையடுத்து, விவசாயிகள் உடனடியாக காய்கறிக் கடைகளை காலி செய்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா். இதனிடையே, உழவா் சந்தையை பயன்படுத்தி வந்த விவசாயிகளுக்கு காய்கறிகளை விற்பனை செய்ய வேறு இடத்தை அதிகாரிகள் ஒதுக்கித் தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலூா் அருகே காா் கவிழ்ந்ததில் பெண் பலி: கணவா் பலத்த காயம்

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வாகை சூடினாா் ஸ்வெரெவ்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

SCROLL FOR NEXT