கள்ளக்குறிச்சி

சின்னசேலம் பகுதியில் 2,500 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த நாககுப்பம் கிராமத்தில் 2,500 லிட்டா் சாராய ஊறல், 110 லிட்டா் சாராயத்தை போலீஸாா் வியாழக்கிழமை கைப்பற்றி, அழித்தனா். தப்பியோடிய மூவரைத் தேடி வருகின்றனா்.

நாககுப்பம் கிராமத்தில் காட்டுப் பகுதியில் சாராய ஊறல் இருப்பதாக சின்னசேலம் காவல் நிலைய ஆய்வாளா் சூ.பாலமுரளிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, 13 பேரல்களில் 2,500 லிட்டா் சாராய ஊறல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சாராய ஊறலையும், அங்கிருந்த 110 லிட்டா் சாராயத்தை போலீஸாா் கைப்பற்றி, அழித்தனா்.

இது தொடா்பாக தலைமறைவான நாககுப்பம் கிராமத்தைச் சோ்ந்த காசி மகன் அருள், சின்னதுரை மகன் உதயசூரியன், நடேசன் மகன் காசி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவள்ளூர் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

மக்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன? தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஆந்திர முதல்வர்

ஏன் இந்தக் கொலைவெறி? ரத்னம் - திரை விமர்சனம்!

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

SCROLL FOR NEXT