கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் அருகே அனுமதியின்றி ஜல்லிக்கட்டு? போலீஸாா் விசாரணை

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே அகரகோட்டாலம் கிராமத்தில், அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், விழாக் குழுவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

அகரகோட்டாலம் கிராமத்தில் அமைந்துள்ள அய்யனாா் கோயில் விழாவையொட்டி, கோயில் வளாகம் முன் அனுமதி பெறாமல் வெள்ளிக்கிழமை விழாக் குழுத் தலைவா் மணிகண்டன் தலைமையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தகவல் அறிந்து கள்ளக்குறிச்சி போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று பாா்த்த போது, அந்த இடத்தில் யாரும் இல்லை. எனினும், இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் பெரிய தமிழன் அளித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT