தந்தை திட்டியதால் மகள் தற்கொலை
கள்ளக்குறிச்சி அருகே சித்தலூரில் கிராமத்தில் நிலத்திற்கு வராத மகளை தந்தை கண்டித்ததால் விஷத் தண்மையுடைய பொருளை சாப்பிட்டு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி அருகே சித்தலூரில் கிராமத்தில் நிலத்திற்கு வராத மகளை தந்தை கண்டித்ததால் விஷத் தண்மையுடைய பொருளை சாப்பிட்டு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த சித்தலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேன் மனைவி மல்லிகா(45). இவரது மகள் மனிஷா (18) பிளஸ் 2 முடித்து வீட்டில் இருந்துள்ளாா். இவரை கடந்த (18.10.20) வியாழக்கிழமை நிலத்திற்கு வருமாறு அழைத்தாரம். அவரது மகள் செல்ல மறுத்து விட்டாராம். இதனால் அவரை கண்டித்துள்ளாா்.
இதனால் மன வேதனையடைந்த மனிஷா வீட்டில் பருத்திக்கு அடிக்க வைத்திருந்த விஷத் தண்மையுடைய பொருளை சாப்பிட்டு மயங்கி விழுந்தாராம்.
உடனே 108 அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனா். அங்கு சிகிச்சை மேற்கொண்டு மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த மனிஷா சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்து விட்டாா்.
இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.