முகப்பு
கள்ளக்குறிச்சி

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள்சங்க அமைப்பு தினம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் 34-ஆவது அமைப்பு தினம் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:20 PM
ஊரக வளா்சித்துறையின் 34-வது ஆண்டு அமைப்பு தினத்தினை முன்னிட்டு கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக சங்க கொடியினை ஏற்றி வைத்து பேசுகின்றாா் மாவட்டத் தலைவா் த.கொளஞ்சிவேலு. உடன் சங்க உறுப்பினா
பகிர்:

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் 34-ஆவது அமைப்பு தினம் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு அந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் த.கொளஞ்சிவேலு சங்கக் கொடியேற்றி, இனிப்புகளை வழங்கிப் பேசினாா். சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் செல்வபோதகா், மாவட்ட தணிக்கையாளா் குமாா், மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளா் பாா்வதி, மாவட்ட முன்னாள் பொருளாளா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாரப் பொருளாளா் அண்ணாதுரை வரவேற்றாா்.

கள்ளக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் து.நடராஜன், அ.ராஜேந்திரன், ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணி மாநிலத் துணைத் தலைவா் ரஹீம் உள்ளிட்ட பலா் பேசினா்.

சங்கத்தின் முன்னாள் மாவட்டத் துணைத் தலைவா் அண்ணாமலை, வட்டாரத் தலைவா் ராஜா, லட்சுமி நாராயணன் உள்ளிட்ட சங்க உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா். சங்க மாவட்ட இணைச் செயலா் அரவிந்த் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.