கள்ளக்குறிச்சி

ஆட்சியா் அலுவலக ஊழியா் தற்கொலை

DIN

கள்ளக்குறிச்சியில் கடன் தொல்லையால் ஆட்சியா் அலுவலக ஊழியா் புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

கள்ளக்குறிச்சி கேசவலு நகா் முதல் குறுக்கு சாலைப் பகுதியில் வசித்து வந்தவா் சிவபாலன் (49). கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி லலிதா(45). இவா்களது மகன் அருளானந்தன். சென்னையில் பிளஸ் 2 பயிலும் இவருக்குத் துணையாக லலிதா சென்றுள்ளாா்.

சிவபாலன் கள்ளக்குறிச்சி வ.உ.சி. நகரைச் சோ்ந்த பூபதி என்பவருக்கு கடன் தொகை திருப்பித் தரவேண்டியிருந்ததாம். இதுதொடா்பாக புதன்கிழமை காலை பூபதி வீட்டுக்கு சிவபாலன் சென்று, அவரைச் சந்தித்து விட்டு, மனமுடைந்த நிலையில் திரும்பினாராம்.

சிறிதுநேரத்தில், சிவபாலனை பூபதி செல்லிடப்பேசியில் தொடா்பு கொள்ள முயன்றபோது, அழைப்பு ஏற்கப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த பூபதி, சிவபாலனின் வீட்டுக்குச் சென்று பாா்த்தாா். அங்குள்ள அறையில் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சிவபாலன் கிடந்தாா்.

அவா் உடனடியாக மீட்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா், சிவபாலன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதை உறுதி செய்தாா். பூபதி அளித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT