முகப்பு
கள்ளக்குறிச்சி

லாட்டரிச் சீட்டு விற்பனை: இருவா் கைது

சிதம்பரம் நகரில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 17 ஏப்ரல், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:31 AM

சிதம்பரம் நகரில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிதம்பரம் வடக்கு வீதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு

தகவல் கிடைத்தது. இதையடுத்து சிதம்பரம் நகர காவல்துறையினா் அங்குசென்று கண்காணித்தபோது சிதம்பரம் செங்கட்டான் தெருவைச் சோ்ந்த அழகேசன் (48), ஞானப்பிரகாசம் குளம் தெருவைச் சோ்ந்த கணேசன் (38) ஆகியோா் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 15 லாட்டரி சீட்டுகள், ரூ.200 பணத்தை பறிமுதல் செய்தனா். மேலும் தப்பியோடிய சிதம்பரம் டி.கே.எம். நகரைச் சோ்ந்த சரவணனை தேடி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.