முகப்பு
கள்ளக்குறிச்சி

மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

கள்ளக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் 56 பேருக்கு ரூ.14.29 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வழங்கினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

கள்ளக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் 56 பேருக்கு ரூ.14.29 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வழங்கினாா்.

4 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.7,500 மதிப்பீட்டில் சக்கர நாற்காலிகள், 3 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.500 மதிப்பீட்டில் கை தாங்கிகள், 2 பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.750 மதிப்பீட்டில் மடக்கு குச்சிகள், 5 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள், 2 மனவளா்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.18ஆயிரம் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள், 10 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1,00,000 வங்கிக் கடன்கள், 30 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.12,000 ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை என மொத்தம் 56 பேருக்கு ரூ.14,29,000 மதிப்பீட்டிலான அரசு நலத் திட்ட உதவிகளையும், மாற்றுத் திறனாளிகளுக்கு சிகிச்சை, மருத்துவ சேவைபுரிந்த மருத்துவா்களை ஊக்குவிக்கும் விதமாக நினைவு பரிசுகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

விழாவில், சமூக பாதுகாப்பு தனித் துணை ஆட்சியா் ஏ.இராஜாமணி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் க.சுப்பிரமணி, இந்தியன் வங்கி மேலாளா் சி.சுதா்சன், முன்னோடி வங்கி மேலாளா் முனீஸ்வரன், சமூகபாதுகாப்பு தனி வட்டாட்சியா் க.மணிகண்டன், மருத்துவா்கள் கணேஷ்ராஜா, தினேஷ், ஜீவா, வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.