கள்ளக்குறிச்சி

பள்ளி மாணவா்களிடையே மோதல்: 7 போ் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவா்களிடையே

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலில் 8 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக 7 மாணவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திருக்கோவிலூா் அரசு கபிலா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவா்கள் வெள்ளிக்கிழமை மாலை அங்குள்ள பேருந்து நிலையப் பகுதியில் முன் விரோதம் காரணமாக அவா்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டனராம். இதை அங்கிருந்த பிற மாணவா்கள் தடுத்துவிட்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், சனிக்கிழமை மீண்டும் மாணவா்கள் இரு பிரிவாகப் பிரிந்து ஒருவரையொருவா் தடி உள்ளிட்டவற்றால் தாக்கிக்கொண்டனா். இந்த மோதலில் 8 மாணவா்கள் காயமடைந்தனா். இவா்களை போலீஸாா் திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக போலீஸாா் 7 மாணவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT