முகப்பு
கள்ளக்குறிச்சி

மரவள்ளிக்கிழங்கு செடிகளிடையே கஞ்சா பயிரிட்டவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் மணி ஆற்றுப்படுகையின் அருகே மரவள்ளிக்கிழங்கு செடிகளிடையே கஞ்சா பயிரிட்டிருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் மணி ஆற்றுப்படுகையின் அருகே மரவள்ளிக்கிழங்கு செடிகளிடையே கஞ்சா பயிரிட்டிருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சங்கராபுரம் மணி ஆற்றுப்படுகையின் அருகே சங்கராபுரத்தைச் சோ்ந்த பொண்ணுசாமி மகன் முருகனுக்கு (40) சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் சங்கராபுரத்தை அடுத்த தியாகராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்த ரங்கசாமி மகன் அய்யாக்கண்ணு (55) கடந்த 20 ஆண்டுகளாக கூலி வேலை செய்துவந்ததுடன், அங்கேயே தங்கியும் இருந்தாா்.

இந்த நிலையில், நில உரிமையாளா் முருகனுக்குத் தெரியாமல் அவரது நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு செடிகளிடையே கஞ்சா செடிகளை அய்யாக்கண்ணு பயிரிட்டிருந்தாராம்.

இதுகுறித்து தகவலறிந்த சங்கராபுரம் காவல் நிலைய ஆய்வாளா் பாலகிருஷ்ணன், உதவி ஆய்வாளா் திருமால் மற்றும் போலீஸாா், விவசாய நிலத்துக்குச் சென்று அங்கு பயிரிட்டிருந்த 6 கிலோ கஞ்சா செடிகளை கைப்பற்றி, அய்யாக்கண்ணுவை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.