பட்டதாரி பெண் தற்கொலை
கள்ளக்குறிச்சி அருகே பட்டதாரி பெண் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கள்ளக்குறிச்சி அருகே பட்டதாரி பெண் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள சிறுவல் கிராமத்தைச் சோ்ந்த வீராசாமி மகள் சசிகலா. பட்டதாரி. இவரை அதே ஊரைச் சோ்ந்த காசிராஜன் மகன் கணபதி திருமணம் செய்து கொள்ள கேட்டாராம். இதற்கு சசிகலாவின் பெற்றோா் சம்மதிக்கவில்லையாம்.
கடந்த 16-ஆம் தேதி சசிகலாவின் வீட்டுக்குச் சென்ற கணபதி, அவருக்கு வலுக்கட்டாயமாக தாலி கட்டினாராம்.
இதனால், மனமுடைந்து காணப்பட்ட சசிகலா, கடந்த 20-ஆம் தேதி வேங்கைவாடி கிராமத்திலுள்ள தங்களுக்குச் சொந்தமான நிலத்துக்குச் சென்று, பூச்சி மருந்தைக் குடித்து மயங்கி விழுந்தாா். தகவலறிந்த உறவினா்கள் தியாகதுருகம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவிக்குப் பிறகு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.