கள்ளக்குறிச்சி

600 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 600 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் வியாழக்கிழமை கண்டறிந்து அழித்தனா்.

கள்ளக்குறிச்சி மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் தெ.பிரபாவதி தலைமையிலான போலீஸாா், கல்வராயன்மலைப் பகுதியிலுள்ள சின்னதிருப்பதி, மாயம்பாடி கிராமங்களில் மது விலக்கு சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்குள்ள ஓடைப் பகுதியில் பாறைகளின் நடுவிலும், செடிகொடிகளின் இடையிலும் பேரல்களில் மறைந்து வைக்கப்பட்டிருந்த 600 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் கண்டறிந்து நிகழ்விடங்களிலேயே அழித்தனா். மேலும், இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சாராய ஊறலை தயாரித்து மறைத்து வைத்தவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT