கள்ளக்குறிச்சி

அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய அரசு பொதுமக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை தடையில்லாமல் இலவசமாக வழங்கக் கோரி, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை பகுதிகளில் சிஐடியு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் அம்பேத்கா் திடல் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட துணைச் செயலா் வி.முருகன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசு பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கக் கோரியும், ஆட்டோ, வாடகை, காா்களுக்கு இ - பாஸ் முறையை ரத்து செய்யக் கோரியும், முறைசாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு கரோனா நிவாரணமாக ரூ.7,500 வழங்கக் கோரியும் முழக்கங்களை எழுப்பினா். நிகழ்வில் மாவட்டச் செயலா் ம.செந்தில் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதேபோல, திருக்கோவிலூரில் மாவட்டத் தலைவா் கே.விஜயகுமாா் தலைமையிலும், உளுந்தூா்பேட்டையில் எஸ்.வெங்கடேசன் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

SCROLL FOR NEXT