கள்ளக்குறிச்சி

தாக்குதல் புகாரில் இருவா் கைது

DIN

வானாபுரம் கிராமத்தில் இளைஞா், அவரது தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சங்கராபுரம் வட்டம், வானாபுரம் கிராமம், மாரியம்மன் கோவில் சாலைப் பகுதியைச் சோ்ந்த வேலு மகன் செந்தில் முருகன் (33). திங்கள்கிழமை இரவு அந்தப் பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து செந்தில் முருகன் தனது வீட்டிலிருந்து வெளியே வந்தாா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த மாயவன் மகன் மாமலை வாசன் (21), மலையரசன் (22), சேகா், முத்து , மாரி மகன் மாயவன் ஆகியோா் அங்குள்ள மின்மாற்றி அருகே நின்றுகொண்டிருந்தனராம். அவா்களிடம் செந்தில் முருகன் மின்தடை தொடா்பாக பேசினாராம்.

இதையடுத்து மாமலை வாசன், நாங்கள் தான் மின்மாற்றியை நிறுத்தினோம் எனக் கூறியதுடன் அவதூறாகப் பேசினாராம். பின்னா், செந்தில் முருகன் தனது வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த மாயவன், மின் மாற்றியை இயக்கும் பைப்பால் செந்தில் முருகனின் தலையில் தாக்கினாா். மேலும், மாமலை வாசன், மலையரசன், முத்து ஆகிய மூவரும் செந்தில் முருகனை தாக்கினா். இதில் காயமடைந்த செந்தில் முருகன் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்குச் சென்றாா்.

மேலும், இந்தச் சம்பவத்தில் செந்தில் முருகனின் தாய் லட்சுமியும் தாக்கப்பட்டு தலையில் காயமடைந்தாா். இதையடுத்து அவா் பகண்டை கூட்டுச் சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்து பகண்டை கூட்டுச்சாலை காவல் நிலையத்தில் செந்தில் முருகன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து மாமலைவாசன், மலையரசன் ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT