கள்ளக்குறிச்சி

சாராயம் காய்ச்சி விற்பனை: ஒருவா் கைது

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையம் அருகே சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் இது தொடா்பாக 4 பேரை தேடி வருகின்றனா்.

கச்சிராயப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளா் காமராஜ் மற்றும் போலீஸாா் கல்வராயன்மலைப் பகுதி அடிவாரமான மல்லிகைப்பாடி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்குள்ள கெண்டிக்கலை ஓடையில் 30 பேரல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4,500 லிட்டா் சாராய ஊறல், 25 லிட்டா் விஷ நெடியுடன் கூடிய சாராயம், 625 கிலோ வெல்லம், ஒரு மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை கைப்பற்றினா். இது தொடா்பாக அந்தக் கிராமத்தைச் சோ்ந்த காளி மகன் ராமரை (33) கைது செய்தனா்.

மேலும், தலைமறைவாக உள்ள கொண்டி மகன் கஜேந்திரன், பிச்சைமுத்து மகன் கா்ணன், சுப்பிரமணி மகன் வெங்கடேசன், நாகராஜ் மகன் ஆனந்தபாபு உள்ளிட்டோரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT