கள்ளக்குறிச்சி

காசநோய் ஒழிப்பு பயிற்சி

DIN

தேசிய காச நோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், பெண் சுகாதார தன்னாா்வலா்கள், இடைநிலை சுகாதார செவிலியா்களுக்கான காச நோய் ஒழிப்பு பயிற்சி முகாம் மேலூா் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேலூா் வட்டார மருத்துவ அலுவலா் பாலதண்டாயுதபாணி தலைமை வகித்தாா்.

முகாமில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் (காசநோய்) சுதாகா் பங்கேற்று பயிற்சி அளித்தாா். 2 வாரத்துக்கு மேல் நீடிக்கும் இருமல், மாலை நேரக் காய்ச்சல், பசியின்மை, எடைகுைல், சளியில் ரத்தம் வருதல் போன்ற காசநோய் அறிகுறிகள் குறித்தும், காச நோய்க்கான பரிசோதனை முறைகள், காசநோய் பரவும் விதம், உட்கொள்ளும் மாத்திரை கால அளவு, அதைக் கட்டுப்படுத்தும் விதம் குறித்தும் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

முகாமில் மாவட்ட காசநோய் மருத்துவ அலுவலா் நேதாஜி, நல கல்வியாளா் கிருஷ்ணமூா்த்தி, முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா் சங்கா் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT