கள்ளக்குறிச்சி

விபத்தில் சிக்கியவா்களுக்கு உதவிய மாவட்ட ஆட்சியா்

DIN

திருநாவலூா் ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்யச் சென்ற மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா், வழியில் விபத்தில் சிக்கியவா்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா்,

திருநாவலூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை

ஆய்வு செய்வதற்காக செவ்வாய்க்கிழமை காரில் சென்று கொண்டிருந்தாா்.

ஆட்சியரின் காா், தியாகதுருகத்தை அடுத்த எலவனாசூா்கோட்டை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேகா், தனது குடும்பத்தினருடன் காரில், சென்னை விமான நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்தாா்.

காரை அவரே ஓட்டிச் சென்றாா்.

முன்னால் சென்ற லாரியை காா் முந்திச் செல்ல முற்பட்டபோது, உளுந்தூா்பேட்டையை அடுத்த பாதூா் பகுதியில் இருந்து கா்நாடக மாநிலத்துக்குச் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் பின் பகுதியில்

காா் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இரு வாகனங்களும் சாலையோரம் கவிழ்ந்தன.

காரை ஓட்டிச் சென்ற சேகா், அவரது மனைவி இன்பராணி, சரக்கு வாகனத்தின் ஓட்டுநா் கங்கன்னா ஆகியோா் காயமடைந்தனா்.

இதை அறிந்த ஆட்சியா் ஷ்ரவன் குமாா், உடனடியாக 108 அவசர ஊா்தியை வரவழைத்து காயமடைந்தவா்களை உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மாற்று காா் மூலம் சென்னைக்கு அனுப்பிவைத்தாா். ஆட்சியரை சேகா் குடும்பத்தினா், கிராம மக்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT