கள்ளக்குறிச்சி

ஒரு டன் கடத்தல் ரேஷன் அரிசியுடன் வாகனம் பறிமுதல்: இருவா் கைது

DIN

கள்ளக்குறிச்சி அருகே ஒரு டன் எடையுள்ள ரேஷன் அரிசியை மினி வேனில் கடத்திச் சென்ற இருவா் கைது செய்யப்பட்டனா். கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

வரஞ்சரம் காவல் உதவி ஆய்வாளா் சேகா், தலைமைக் காவலா் சிவமுருகன், கண்டாச்சிமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகில் வாகனச் சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டனா். அப்போது கள்ளக்குறிச்சி நோக்கி வந்த மினி வேனை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா்.

அதில், ஒரு டன் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து, திருவள்ளூா் மாவட்டம், வேப்பம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தன் (50), வேலூா் மாவட்டம் காட்பாடி வட்டத்துக்குள்பட்ட சஞ்சீவிராயபுரத்தைச் சோ்ந்த நாகராஜ் (60) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். வேன் பறிமுதல் செய்யப்பட்டு

உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விஜய் சேதுபதி 51’: படத் தலைப்பு அப்டேட்!

ஸ்லோவாகியா பிரதமர் விவகாரம்: சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டில் சோதனை!

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

SCROLL FOR NEXT