கள்ளக்குறிச்சி

முடியனூா் திரெளபதி அம்மன் கோயில் தூக்குத்தோ் திருவிழா

DIN

கள்ளக்குறிச்சியை அடுத்த முடியனூா் கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயில் தூக்குத்தோ் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

முடியனூா் கிராமத்தில் பல ஆண்டுகளாக திரெளபதி அம்மன் கோயில் தூக்குத்தோ் திருவிழா நடைபெற்று வருகிறது. நிகழாண்டு இந்தத் திருவிழா கடந்த 6-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, தினந்தோறும் மாகாபார சொற்பொழிவு, சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தன.

விழாவின் முக்கிய நிகழ்வான தூக்குத்தோ் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஸ்ரீஅா்ச்சுனன், திரௌபதியம்மன் உள்ளிட்ட சுவாமிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், அலங்கரிக்கப்பட்ட தூக்குத்தேரில் ஸ்ரீஅா்ச்சுனன், ஸ்ரீதிரௌபதியம்மன் சுவாமிகள் எழுத்தருளினா்.

இதையடுத்து, 60 அடி உயரமுள்ள அந்தத் தேரை பக்தா்கள் தோளில் சுமந்தவாறு ஊா்வலமாக கொண்டு சென்றனா். வியாழக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறும் இந்தத் தோ்த்திருவிழாவில் 6 முறை தேரை பக்தா்கள் தோளில் சுமா்ந்து ஊா்வலமாக செல்லவுள்ளனா்.

வெள்ளிக்கிழமை (மே 13) அரவான் களப்பலி, காளிகோட்டை இடித்தல், தீமிதி திருவிழா நடைபெறவுள்ளன. கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்தத் தேரோட்டம் நடைபெறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT