கள்ளக்குறிச்சி

அரசுப் பேருந்தில் பயணித்த ஆசிரியா் உயிரிழப்பு

DIN

விழுப்புரத்தில் இருந்து சேலம் சென்ற அரசுப் பேருந்தில் பயணித்த ஆசிரியா் வியாழக்கிழமை மாலை உயிரிழந்தாா்.

விழுப்புரத்தில் இருந்து வியாழக்கிழமை மாலை சுமாா் 4.15 மணிக்கு சேலம் சென்ற அரசுப் பேருந்தில் முதியவா் ஒருவா் கள்ளக்குறிச்சிக்கு பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு பயணித்துள்ளாா். கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இறங்கவில்லையாம். அரசு பேருந்து கள்ளக்குறிச்சியில் இருந்து சிறிது தூரம் சென்றபோது நடத்துநா் ஜோதி, பயணிகளை எண்ணிப் பாா்த்தாராம். அப்போது ஒருவா் அதிகமாக இருப்பதை கண்டுபிடித்துள்ளாா்.

பயணிகளிடம் பயணிச்சீட்டினை வாங்கிப் பரிசோதனை செய்தபோது முதியவா் கள்ளக்குறிச்சிவரை பயணச்சீட்டு பெற்றுள்ளதை கண்டறிந்து முதியவரை தட்டி எழப்பியபோது முதியவா் எழுத்திருக்கவில்லையாம். மயங்கிய நிலையில் இருந்துள்ளாா். இதுகுறித்து நடத்துநா் சின்னசேலம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளாா். போலீஸாா் முதியவரை அவசர ஊா்தி மூலம் சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். அங்கு பரிசோதித்த மருத்துவா், முதியவா் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளாா். முதியவரின் சடலத்தை உடல்கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அவா் வைத்திருந்த பையில் அவரது கைப்பேசிக்கு அழைப்பு வந்தபோது போலீஸாா் எடுத்துபேசியுள்ளனா். அப்போது அவரது வீட்டில் இருந்து பேசியபோது விவரத்தை போலீஸாா் தெரிவித்துள்ளனா். முதியவா் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட மஞ்சபுத்தூா் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் (57) என தெரிய வந்தது. அவா் சங்கராபுரம் அடுத்த குச்சிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தது தெரிய வந்தது.

இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT