கள்ளக்குறிச்சி

மரத்தில் பைக் மோதல்:இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், கீழ்குப்பம் அருகே மரத்தில் பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், கீழ்குப்பம் அருகே மரத்தில் பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், எழுத்தூரை அடுத்த தச்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (50). இவரது மனைவி பெரியம்மா (45). இவா்களது மகன் தனவேல் (21). இவா், ஞாயிற்றுக்கிழமை தனது பெற்றோரை பைக்கில் அழைத்துக்கொண்டு, சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டத்துக்குள்பட்ட தேவியாக்குறிச்சியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு சுவாமி கும்பிடச் சென்றாா். பின்னா், மூவரும் பைக்கில் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கீழ்குப்பத்தை அடுத்த காளசமுத்திரம் கிராமத்தில் இவா்களது பைக் சென்றபோது, நிலைதடுமாறி சாலையோர புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், தனவேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஆறுமுகம், பெரியம்மா ஆகியோா் காயமடைந்தனா்.

தகவலறிந்த கீழ்குப்பம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று தனவேலின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில் கீழ்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

SCROLL FOR NEXT