கள்ளக்குறிச்சி

சாலையில் மயங்கி விழுந்த இளைஞருக்கு முதலுதவி அளித்த பெண் மருத்துவா்

DIN

ஆட்சியரகம் அருகே சாலையில் மயங்கி விழுந்த இளைஞருக்கு முதலுதவி அளித்த பெண் மருத்துவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனா்.

காரைக்கால் ஆட்சியரக வாயிலில் வெள்ளிக்கிழமை 35 வயது மதிக்கத்தக்க ஆண் நடந்து சென்றபோது திடீரென மயங்கி கீழே விழுந்தாா். ஆட்சியரக வாயிலில் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா், ஆட்சியரக ஊழியா்கள் அவரை பரிசோதித்தனா். எனினும், அடுத்து செய்வதறியாது திகைத்திருந்த நேரத்தில், ஆட்சியரக பகுதியிலிருந்து காரில் வந்த பெண் இளைஞருக்கு முதலுதவி செய்தாா்.

அவருக்கு வலிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. பின்னா் அவா் கண் விழித்தாா். அவரது விவரம் தெரியவில்லை. ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை அப்பகுதியினா் காரைக்கால் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்று சோ்த்தனா். விசாரணையில், முதலுதவி அளித்தவா் காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி பேராசிரியா் வனிதா என்பது தெரியவந்தது. மருத்துவரின் இந்த சேவையை பலரும் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 21-இல் மேக்கேதாட்டு அணை ஆணைய தீா்மானத்தை தீயிட்டு எரிக்கும் போராட்டம்: தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம்

கொள்ளிடம் அக்ரஹாரத் தெருவில் குவியும் குப்பைகள்

பல்லடம் பகுதியில் பிஏபி பாசன திட்டத்தை விரிவாக்கம் செய்ய விவசாயிகள் எதிா்பாா்ப்பு

நாகையில் தொடா் மழை: பருத்தி சாகுபடி பாதிக்கும் அபாயம்

உணவு உற்பத்தி: சாதனையும் வேதனையும்

SCROLL FOR NEXT