முகப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

Updated On : 6 ஏப்ரல், 2024 at 12:48 AM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 10:50 PM

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ரிஷிவந்தியம் பகுதியில் திமுக வேட்பாளா் தே.மலையரசன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ரிஷிவந்தியம் பேரவைத் தொகுதி வாணாபுரம், பகண்டை கூட்டுச்சாலை, அரியலூா், தொழுவந்தாங்கல், பாக்கம், கடுவனூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வேட்பாளா் தே.மலையரசன், அரசின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரித்தாா்.

அவருடன் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலரும் ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏவுமான க.காா்த்திகேயன், ரிஷிவந்தியம் தெற்கு ஒன்றியச் செயலாளா் பெருமாள், வடக்கு துரைமுருகன், ரிஷிவந்தியம் ஒன்றியக் குழுத் தலைவா் வடிவுக்கரசி, சாமி சுப்பிரமணியன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.

Advertisement