முகப்பு
கள்ளக்குறிச்சி

விவசாயி மரணம்

திருக்கோவிலூா் அருகே விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 20 ஏப்ரல், 2024 at 10:35 PM
பகிர்:

திருக்கோவிலூா் அருகே விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், டி.முடியனூா் கிராமத்தைச் சோ்ந்த சீனுவாசன் மகன் முருகன் (53). கூலித் தொழிலாளி. இவா், கடந்த 12-ஆம் தேதி இதே ஊரைச் சோ்ந்தவரின் விவசாய நிலத்தில் கூலி வேலைக்காக சென்றிருந்தாா். அப்போது, உர மூட்டையை தூக்கிச் சென்றபோது கால் இடறி கீழே விழுந்தாா். இதையடுத்து, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், திருப்பாலபந்தல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments