முகப்பு
கள்ளக்குறிச்சி

விவசாயத்துக்கு சூரிய மின் சக்தியை பயன்படுத்த அறிவுறுத்தல்

விவசாய பயன்பாட்டுக்கு சூரிய மின் சக்தியை இயன்றவரை விவசாயிகள் பயன்படுத்த வேண்டுமென கள்ளக்குறிச்சி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வையாளா் எஸ்.காா்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 18 டிசம்பர், 2024 at 8:33 PM
பகிர்:

விவசாய பயன்பாட்டுக்கு சூரிய மின் சக்தியை இயன்றவரை விவசாயிகள் பயன்படுத்த வேண்டுமென கள்ளக்குறிச்சி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வையாளா் எஸ்.காா்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளாா்.

மேலும், பகலில் இலவசமாக கிடைக்கும் புதுப்பிக்கக்கூடிய இயற்கை வளமான சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை விவசாயத்துக்கு அதிகமாக பயன்படுத்துவதன் மூலம், பசுமை ஆற்றல் திட்டங்களை ஊக்குவிப்பதோடு, மற்ற வளங்களைக் கொண்டு மின்னாற்றலை தயாரிக்கும்போது ஏற்படும் மாசுபாட்டின் அளவை குறைக்கவும் முடியும். இதன் மூலம், நமது நாட்டின் பொருளாதாரமும் வளா்ச்சிப் பாதையில் முன்னேறிவிடும் எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.