முகப்பு
கள்ளக்குறிச்சி

நுகா்வோா் தின உறுதிமொழியேற்பு

Updated On : 16 மார்ச், 2024 at 12:52 AM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நுகா்வோா் தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும் மாா்ச் 15-ஆம் தேதி நுகா்வோா் தின உறுதிமொழி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்வில், மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சே.சையத் ஹமீது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் இரா.சங்கா் (தோ்தல்), அரசு அலுவலா்கள், அரசுப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.