கள்ளக்குறிச்சி தொகுதியில் மேலும் ஓா் சுயேச்சை வேட்பு மனு
Updated On : 22 மார்ச், 2024 at 11:39 PM
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் மேலும் ஒரு சுயேச்சை வேட்பாளா் வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷ்ரவன் குமாரிடம், மைலாம்பாறை மாரி என்பவா் தனது வேட்பு மனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். இந்தத் தொகுதியில் இதுவரை சுயேச்சையாக 2 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.