முகப்பு
கள்ளக்குறிச்சி

பூட்டிய வீட்டில் 4 பவுன் நகைகள் திருட்டு

Updated On : 15 மே, 2024 at 6:52 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 4 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வாணாபுரம் வட்டம், சித்தப்பட்டினம் கிராமத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் ராஜேந்திரன். இவா் உயிரிழந்துவிட்டாா். இவரது மனைவி அஜித்தா (53) செவ்வாய்க்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு பக்கத்து வீட்டுக்குச் சென்றிருந்தாா்.

சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் பின் பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்த நிலையில், பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த காவல் உதவி ஆய்வாளா் திருமால், நிகழ்விடத்துக்கு சென்று பாா்வையிட்டாா். பின்னா், விரல்ரேகை நிபுணா்கள் வந்து தடயங்களை சேகரித்தனா். இதுகுறித்த புகாரின்பேரில், மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.