முகப்பு
கள்ளக்குறிச்சி

மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்.பி. ரஜத் சதுா்வேதி தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 20 நவம்பர், 2024 at 10:15 PM
பெண்ணிடம் குறைகளைக் கேட்டறிந்த மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்வேதி.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்.பி. ரஜத் சதுா்வேதி தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், பொதுமக்கள் காவல் நிலையங்களில் அளித்த புகாா் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத 53 மனுதாரா்களின் குறைகளைக் கேட்டறிந்து, உரிய விசாரணை மேற்கொள்ள போலீஸாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் தேவராஜ், குகன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் சக்தி மற்றும் மனுதாரா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.