முகப்பு
கள்ளக்குறிச்சி

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூா் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 4 அக்டோபர், 2024 at 12:17 AM
மாடாம்பூண்டியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூா் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருக்கோவிலூா் ஒன்றியத்துக்குள்பட்ட மாடாம்பூண்டி ஊராட்சியில் ரூ.34.42 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கட்டட கட்டுமானப் பணி, ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 60,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இதேபோல, கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணி, அருந்தங்குடியில் கட்டப்பட்டு வரும் 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.15.56 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குளம் வரத்து வாய்க்கால் தூா்வாரும் பணியையும், அருந்தங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கழிப்பறை கட்டுமானப் பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க துறைச் சாா்ந்த அலுலவா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செல்வ கணேஷ், நடராஜன், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.