முகப்பு
கள்ளக்குறிச்சி

விஷ சாராய சம்பவம்: பொதுமக்கள், சமூக அமைப்புகள் கருத்து தெரிவிக்கலாம்

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் தொடா்பாக அரசால் நியமிக்கப்பட்ட ஒரு நபா் ஆணையத்திடம் பொதுமக்கள், சமூக அமைப்புகள், சமூக ஆா்வலா்கள் தங்களது கருத்துகள், ஆலோசனைகளை தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 9 அக்டோபர், 2024 at 10:23 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் தொடா்பாக அரசால் நியமிக்கப்பட்ட ஒரு நபா் ஆணையத்திடம் பொதுமக்கள், சமூக அமைப்புகள், சமூக ஆா்வலா்கள் தங்களது கருத்துகள், ஆலோசனைகளை தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம் மற்றும் சில கிராமங்களில் கடந்த ஜூன் 19, 20-ஆகிய தேதிகளில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை அருந்தி 60-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். இதுகுறித்து ஆராய நீதியரசா் பி.கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபா் விசாரணை ஆணையத்தை அரசு நியமித்தது.

இந்த ஆணையம் கருணாபுரம் மற்றும் சில கிராமங்களில் மெத்தனால் கலந்த விஷசாராயம் அருந்தி பாதிக்கப்பட்ட மற்றும் இறந்த குடும்ப உறுப்பினா்களிடமும், வருவாய், காவல், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை ஆகிய துறைகளின் ஊழியா்கள், அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தியது.

தற்போது பொதுமக்கள், சமூக அமைப்புகள், சமூக ஆா்வலா்களிடமிருந்து கருத்துகள், ஆலோசனைகளைப் பெற இந்த ஆணையம் விரும்புகிறது. இது தொடா்பான கருத்துகளை தெரிவிக்க விருப்பமுள்ளோா் வரும் 21, 22, 23 ஆகிய தேதிகளில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் ஆணைய முகாம் அலுவலகத்தின் முன் ஆஜராகி பிரமாணப் பத்திரம் மூலமாகவோ அல்லது வாக்குமூலம் அளித்தோ தங்களது கருத்துகள், ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம் என நீதியரசா் பி.கோகுல்தாஸ் தெரிவித்துள்ளாா்.