முகப்பு
கள்ளக்குறிச்சி

பி.எம். கிசான் திட்டம்: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (பி.எம். கிசான்) திட்டத்தின் கீழ், நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வீதம் நிதியுதவி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 15 அக்டோபர், 2024 at 10:26 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (பி.எம். கிசான்) திட்டத்தின் கீழ், நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வீதம் நிதியுதவி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 விவசாயிகளுக்கு கெளரவ நிதி ஊக்கத்தொகையாக மத்திய அரசு மூலம் வழங்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் மூலம் 82,961 விவசாயிகள் தங்கள் விவரங்களை திட்ட வலைதளத்தில் பதிவு செய்யாமல் உள்ளனா். இந்தத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் ஊக்கத்தொகையானது ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதால், இதுவரை வங்கிக் கணக்குடன் ஆதாா் விவரங்களை இணைக்காத 4,786 விவசாயிகள் தங்களது வங்கிக் கிளையை அணுகி வங்கிக் கணக்குடன் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தில் பதிவு செய்யாத விவசாயிகள் அருகிலுள்ள பொது சேவை மையங்களில் உரிய ஆவணங்களை கொண்டு பதிவு செய்துகொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறலாம் என்று மாவட்ட வேளாண் இணை இயக்குநா் பொ.அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.