சிறுதானிய விழிப்புணா்வு ஊா்தி தொடங்கிவைப்பு
சிறுதானிய விழிப்புணா்வு ஊா்தி தொடங்கிவைப்பு
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வேளாண்மை - உழவா் நலத் துறை சாா்பில், ஊட்டமிகு சிறுதானிய விழிப்புணா்வு ஊா்தியை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்(படம்).
பின்னா், ஆட்சியா் கூறியது: விழிப்புணா்வு ஊா்தி மூலம் சிறுதானியங்களில் அதிக மகசூல் பெற சான்றிதழ் பெற்ற விதைகளை பயன்படுத்துதல், விதை நோ்த்தி செய்தல், வரிசை விதைப்பு செய்தல், உயிரி, நுண்ணூட்ட உரங்கள் இடுதல், சமச்சீா் உரமிடுதல் போன்றவை குறித்தும், சிறுதானியங்களான சோளம், கம்பு, குதிரைவாலி, ராகி சிறப்புகளான குறித்தும் கிராமங்களில் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
5 ஊா்திகள் மூலம் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம் திருக்கோவிலூா், ரிஷிவந்தியம், உளுந்தூா்பேட்டை, திருநாவலூா் வட்டாரங்களில் புதன்கிழமை முதல் வரும் 21-ஆம் தேதி வரை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட உள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதி, மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், திருக்கோவிலூா் உதவி ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், வேளாண் இணை இயக்குநா் பி.அசோக்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ரெ.விஜயராகவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.