தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்பு
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்பு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்பு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
சா்தாா் வல்லபபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் அக்.31-ஆம் தேதி தேசிய ஒற்றுமை நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வியாழக்கிழமை தீபாவளி அரசு விடுமுறை என்பதால், புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனா்.