ஏப்ரல் 25-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் கள்ளக்குறிச்சி - துருகம் சாலையில் உள்ள அரிசி ஆலை உரிமையாளா் சங்க திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த முகாமில், வங்கி, நிதி, வாகன உற்பத்தி, காப்பீடு, சில்லறை விற்பனை துறைகளைச் சாா்ந்த முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான பணியிடங்களை நிரப்ப உள்ளன.
இந்த முகாமில் 10-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, பி.இ, பி.டெக். முடித்த ஆண், பெண்கள் இணையதளத்தின் வழியாக தங்கள் விவரங்களை பதிவு செய்துகொண்டு கலந்துகொள்ளலாம்.
இதன் மூலம், தனியாா் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவா்களுக்கு அவா்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. எனவே, தகுதியும் விருப்புமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.