கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற வளாக நோ்காணலில் 30 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு சென்னையில் உள்ள முன்னணி நிறுவனம் மூலம் வேலைவாய்ப்புக்காக வளாக நோ்காணல் நடத்தப்பட்டது.
நோ்காணலில் 75 மாணவா்கள் பங்கேற்றனா். அதில் 30 போ் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு பெற்ற மாணவா்களுக்கு பணி ஆணையை கல்லூரி முதல்வரின் நோ்முக உதவியாளா் எல்.சண்முகம், வேலைவாய்ப்பு அதிகாரி ப. வேல்முருகன், கண்காணிப்பாளா் எ.மீனா குமாரி மற்றும் மனிதவள மேம்பாட்டு அலுவலா் பொ்ணான்ட் சுரேந்தா் ஆகியோா் வழங்கினா்.