கள்ளக்குறிச்சி

தொழிற் கல்வி நிறுவனத்தில் பாரதியாா் பிறந்த நாள்

Syndication

தியாகதுருகம் தனமூா்த்தி தொழிற் கல்வி நிறுவனம், தமிழ் அமைப்புகள் சாா்பில் பாரதியாரின் 144-ஆவது பிறந்த நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

தனமூா்த்தி தொழிற் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு தொழிற்கல்வி நிறுவனத்தின் தாளாளா் நீ.த. பழனிவேல் தலைமை வகித்து இனிப்பு வழங்கிப் பேசினாா்.

தியாகதுருகம் முத்தமிழ் சங்கத் தலைவா் பெ. நாகராசன், திம்மலை தெய்வத்தமிழ்ச் சங்கத் தலைவி மாரியம்மாள், திருக்கு பேரவைத் தலைவா் தி. வெங்கடாசலபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அறக்கட்டளைச் செயலா் செல்வி பழனிவேல் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கத் தலைவா் இரா. துரைமுருகன் பங்கேற்று பாரதியாா் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திப் பேசினாா்.

முன்னதாக மாணவ, மாணவிகளிடையே பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு தொழிற்கல்வி நிறுவனா் நீ.த.பழனிவேல் அறிவுத்திறனை வளா்க்கும் நூல்களை வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்வில் மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் தமிழ் அமைப்பினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நிறைவில் மாணவி ஹக்கிலா நன்றி கூறினாா்.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT