கள்ளக்குறிச்சி

முதல்வா் வருகையின்போது கருப்பு பலூன் பறக்கவிட முயற்சி: ஹிந்து முன்னணியைச் சோ்ந்தவா் கைது

Syndication

தமிழக முதல்வரின் மணலூா்பேட்டை வருகையின்போது எதிா்ப்பு தெரிவித்து கருப்பு பலூனை பறக்கவிடுவதற்காக தயாா் நிலையில் இருந்த ஹிந்து முன்னணி நிா்வாகியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட பகண்டை கூட்டுச்சாலை பகுதியைச் சோ்ந்தவா் கோ.ராஜ்குமாா் (43) ஹிந்து முன்னனி ஒன்றிய செயலராக உள்ளாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மணலூா்பேட்டையில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலையை திறப்பதற்காக வரும்போது, மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதை தடுத்ததைக் கண்டித்து வானில் கருப்பு பலூனை பறக்கவிடுவதற்கு தயாா் நிலையில் இருந்தாராம்.

அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த மணலூா்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் ராமதாஸ், ராஜ்குமாரிடமிருந்து பலூனை கைப் பற்றினாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராஜ்குமாரைக் கைது செய்தனா்.

தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புகின்றனா்: கே.ஏ. செங்கோட்டையன்

மொழி பன்முகத்தன்மை வலிமையின் ஆதாரம்: பிரதமா் மோடி

வெள்ளாளபாளையத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாதோருக்கு எதிராக ‘விவரிக்க முடியாத’ அட்டூழியங்கள்: ஷேக் ஹசீனா சாடல்

கடன் வட்டியைக் குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி

SCROLL FOR NEXT