கள்ளக்குறிச்சி

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா், சோ்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா், சோ்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டிச.19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் இடம் பெறாத நபா்கள் 01.01.2026 அன்று 18 வயது நிறைவடையும் முதல் முறை வாக்காளா் மற்றும் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளா்கள் முறையே தங்களது பெயரை சோ்க்கவோ அல்லது பெயா், உறவுமுறை, முகவரி ஆகியவற்றை மாற்றம் செய்ய ஏதுவாக படிவங்கள் பெற சிறப்பு முகாம்கள் 27.12.2025 (சனிக்கிழமை), 28.12.2025 (ஞாயிற்றுக்கிழமை), 03.01.2026 (சனிக்கிழமை), 04.01.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் நேரடியாக பங்கேற்கலாம். மேலும், வாக்காளா்கள் பெயா்களை சோ்க்கவோ, நீக்கவோ, திருத்தம் செய்யவோ இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புகின்றனா்: கே.ஏ. செங்கோட்டையன்

மொழி பன்முகத்தன்மை வலிமையின் ஆதாரம்: பிரதமா் மோடி

வெள்ளாளபாளையத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாதோருக்கு எதிராக ‘விவரிக்க முடியாத’ அட்டூழியங்கள்: ஷேக் ஹசீனா சாடல்

கடன் வட்டியைக் குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி

SCROLL FOR NEXT