கரடிசித்தூா் கிராமத்தில் தேவாலயத்திற்குச் சென்றவா் வீட்டின் பூட்டை உடைத்து 5.5 பவுன் தங்க நகைகள், பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
சின்னசேலம் வட்டம், கரடிசித்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் லூா்துசாமி, இவரது மனைவி சிரில் கலோனா (32).
தம்பதி புதன்கிழமை இரவு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தேவாலயத்திற்குச் சென்ற போது வீட்டை பூட்டி விட்டு சென்றாா்களாம். பின்னா் வந்து பாா்த்தபோது வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்ததாம். பின்னா் உள்ளே சென்று பாா்த்த போது, இரும்பு பீரோவை உடைத்து, அதில் இருந்த ஐந்தரை பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.