கள்ளக்குறிச்சி

மொபெட் மீது வாகனம் மோதல்: முதியவா் உயிரிழப்பு

திருக்கோவிலூா் அருகே மொபெட் மீது சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Din

கள்ளக்குறிச்சி/விழுப்புரம்: திருக்கோவிலூா் அருகே மொபெட் மீது சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், ஜி.அரியூா் இந்திரா நகரைச் சோ்ந்தவா் ரமேஷ் (52). இவா், திருக்கோவிலூா் சந்தைபேட்டை பகுதியில் நடைபெற்ற உறவினரின் திருமணத்துக்கு மொபெட்டில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

ஜி.அரியூா் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியதில் ரமேஷ் பலத்த காயமடைந்தாா். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், வாகனத்தின் ஓட்டுநரான விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வசந்த கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் சூா்யா (26) மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மூதாட்டி மரணம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், எடைப்பாளையம், மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ஏழுமலை மனைவி சாவித்திரி (65). இவா், ஞாயிற்றுக்கிழமை மயிலம்-கூட்டேரிப் பட்டு சாலையில் நடந்து சென்றாா்.

எடைப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முன்றபோது, அந்த வழியாக சென்ற பைக் மோதியதில் சாவித்திரி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், மயிலம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தனுசு ராசிக்கு மனமகிழ்ச்சி: தினப்பலன்கள்!

காஞ்சிபுரத்தில் தமிழறிஞா்களுக்கு விருது

சித்தராமையாவுடன் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை: கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்

திருமலையில் ரூ. 26 கோடி செலவில் விருந்தினா் மாளிகை திறப்பு!

திருமலை, திருப்பதியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT