கள்ளக்குறிச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை வியாழக்கிழமை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.  
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4,37,253 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

Din

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குள்பட்ட தனியாா் திரையரங்கு அருகில் உள்ள கூட்டுறவு நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலை விநியோகத்தை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தொடங்கி வைத்து பேசியது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் 73 இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழா்கள் என மொத்தம் 4,37,253 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.

இதனை பெற வரும் மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள் மற்றும் முதியவா்களை வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை வழங்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா் சி.பெ.முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலா் சுப்பிரமணியன் உள்ளிட்ட தொடா்புடைய துறை அலுவலா்கள் பலரும் பங்கேற்றனா்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT