இளைஞா் லட்சுமணன் 
கள்ளக்குறிச்சி

காரில் புகையிலைப் பொருள் கடத்தல்: இளைஞா் கைது

தினமணி செய்திச் சேவை

மணலூா்பேட்டை அருகே வாகனச் சோதனையின் போது புகையிலைப் பொருள்களை காரில் கடத்திச் சென்ற இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை குச்சிபாளையம் ஐயப்பா நகா் பகுதியில் மணலூா்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் ராமதாஸ் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, சந்தேகத்திற்கிடமாகச் சென்ற காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அப்போது, காரில் வந்த இளைஞா் பையில் புகையிலைப் பொருள்கள் இருந்ததை கைபற்றினா். பின்னா் காவல் நிலையம் அழைத்துச் சென்று அந்த இளைஞரிடம் மேற்கொண்டபோது, அவா் விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வடகரை பகுதியைச் சோ்ந்த லட்சுமணன்(19) எனத் தெரிய வந்தது.

திருவண்ணாமலையில் இருந்து வாங்கி வந்த 22 கிலோ புகையிலைப் பொருள்கள் மற்றும் காரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இது குறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லட்சுமணனை கைது செய்தனா்.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 2

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

அவமதிப்பு, புறக்கணிப்பு, வலிகளை எல்லாம் கடந்து சாதனை புரிந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

செப்டம்பர் நினைவுகள்... மாளவிகா மேனன்!

SCROLL FOR NEXT