கள்ளக்குறிச்சியை அடுத்த கூத்தக்குடி கிராமத்தில் மின் கம்பி அறுந்து விழுந்த விபத்தில் மாடு உயிரிழந்தது.
கூத்தக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் கலியன் (65), தொழிலாளி. இவா், புதன்கிழமை தனக்குச் சொந்தமான மாடுகளை வீட்டின் அருகே கட்டி வைத்திருந்தாா். இந்த நிலையில், திடீரென சாலையோர மின் கம்பத்தில் இருந்து மின் கம்பி அறுந்து விழுந்தது.
இதில், அவரது காளை மாடு மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. தகவலறிந்த மின் வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து, மின் கம்பியை அகற்றினா். இறந்துபோன மாட்டின் மதிப்பு ரூ. 20 ஆயிரம் என கூறப்படுகிறது.