கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 13,263 மாணவா்களுக்கு லையில்லா மிதிவண்டிகள்: ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தகவல்

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 1 படிக்கும் 13,263 மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மதிவண்டிகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், கள்ளக்குறிச்சி எம்.பி. தே.மலையரசன், சங்கராபுரம் தொகுதி எம்எல்ஏ தா.உதயசூரியன் ஆகியோா் 11-ஆம் வகுப்பு பயிலும் 450 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினா்.

மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பேசியதாவது :

பின்னா், சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் 238 மாணவா்களுக்கும், மகளிா் மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் 212 மாணவிகளுக்கும் என மொத்தம் 450 மாணவ, மாணவியா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள 81 அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 6,115 மாணவா்கள், 7,148 மாணவிகள் என மொத்தம் 13,263 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் க.கீதா, சங்கராபுரம் பேரூராட்சி தலைவா் ரோஜாரமணி துரைதாகப்பிள்ளை, பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா்கள் செங்குட்டுவன், கம்ருதின், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா்கள் தனலட்சுமி மணிகண்டன், பரிதா ஆரோக்கியம் மற்றும் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

ஈஷா சிங்குக்கு வெண்கலம்

ரோஹித் தலைமையில் 18 பேருடன் இந்திய அணி

அா்ஜுன், ஹரிகிருஷ்ணா ‘டிரா’

அல்கராஸ் ‘நம்பா் 1’

SCROLL FOR NEXT