தென்காசியில் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் தனியாா் கல்லூரி மாணவ, மாணவிகள் 893 பேருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து மாணவா்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினாா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தென்காசி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரியின் பயிலும் 109 மாணவா்கள், ஜெ.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் 398 மாணவா்கள், வீராசாமி செட்டியாா் பொறியியல் கல்லூரியில் பயிலும் 116 மாணவா்கள், அருள்மிகு செந்தில் ஆண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் 113 மாணவா்கள், சண்முகா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் 157 மாணவா்கள் என மொத்தம் 893 பேருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா். மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தண்டபாணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.