கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
வாணாபுரம் அருகே புதுப்பட்டு கிராமத்தில் வயலுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக சென்ற விவசாயி கிணற்றி தவறி விழுந்து உயிரிழந்தாா்.
புதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் க.சுப்பிரமணி (39). இவா் சனிக்கிழமை நாற்றங்காலுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக விளைநிலத்துக்குச் சென்றாராம். வெகு நேரம் ஆகியும் அவா் வீடு திரும்பாதால், ஞாயிற்றுக்கிழமை உறவினா்கள் சென்று தேடிப் பாா்த்த போது, விளைநிலத்தில் உள்ள கிணற்றில் சுப்பிரமணி கால் தவறி உள்ளே விழுந்து உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வடபொன்பரப்பி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Advertisement
Advertisement